விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத திமுக அரசை கண்டித்து லால்குடி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் ப.குமார் அறிக்கை.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
பருவம் தவறிய பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க விடியா திமுக அரசை வலியுறுத்தி,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், மாபெரும் கண்டன ஆர்பாட்டம், 22-01-2022 சனிக்கிழமை அன்று காலை 10.35 மணியளவில், லால்குடி தாலுக்கா அலுவலகம் முன்பு நடைபெறவுள்ளது.
அதுசமயம் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக, நகர கழக, பகுதி கழக, பேரூர் கழக, கிளை கழக, வட்டக்கழக சார்பு அணி, எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளீர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் அணி, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி,
இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, வர்த்தக அணி, கலைப்பிரிவு, மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் பிரதிநிதிகள், செயல்வீரர்கள் வீராங்கணைகள், மற்றும் விவசாய பெருங்குடி மக்களும், பொதுமக்களும் திரளாக கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
என தனது அறிக்கையில் கூறியுள்ளார்