அகில இந்திய இந்து மகா சபா திருச்சி மாவட்ட செயலாளராக ராம குணாவை நியமனம் செய்தார், தேசியத்தலைவர் ஸ்ரீகண்டன்.
திருச்சி அகில இந்திய இந்து மகாசபா புதிய மாவட்ட செயலாளர் நியமனம் குறித்து அகில இந்திய இந்து மகாசபா தேசியத்தலைவர் ஸ்ரீகண்டன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அகில இந்திய இந்து மகாசபாவின் தேசிய தலைவர் டாக்டர். கே. ஸ்ரீகண்டன் அவர்களின் ஒப்புதலுடன், மாநில இளைஞரணி பொதுசெயலாளர் திருச்சி எஸ்.பி.ராகுல் ஜி அவர்களின் பரிந்துரைப்படி,
பொன் கே.
ராம குணா ஜி, ஆகிய தாங்கள் நேற்று முதல் (14-01-2022) அகில இந்திய இந்து மகாசபாவின் திருச்சி மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறீர்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது அகில இந்திய இந்து மகாசபாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு
இந்து மதத்தின் வளர்ச்சிக்காகவும், இந்து மக்களின் பாதுகாப்பிற்காகவும், இந்து கோவில்களின் பராமரிப்பிற்காகவும் தங்களது உழைப்பையும், திறமையும் இச்சேவை பணியில் அர்ப்பணித்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்
எனஅகில இந்திய இந்து மகாசபா மாநில தலைவர் ஸ்ரீகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.