திருச்சி கிழக்கு தொகுதியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துவரும் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.
திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் தொடர்ந்து ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை போக்கு வதற்கு நடவடிக்கை எடுத்து வரும் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
இனிகோ இருதயராஜ்,
இன்று 17வது வார்டில் உள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து அதை உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்,
இந்த ஆய்வின் போது, மார்க்கெட் பகுதி கழக பொறுப்பாளர் மெடிக்கல்.மோகன், வட்டக் கழக செயலாளர் சாதிக் பாட்சா,
திருவரங்கம் கோட்ட உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, இளநிலைப் பொறியாளர் ரவிக்குமார், உதவி மின் பொறியாளர் கணேசன், சிறப்புநிலை ஆக்க முகவர் குமார், சுகாதார அலுவலர் லோகேஷ், மேற்பார்வையாளர் செந்தில், மற்றும் கழக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.