Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்தது இங்கிலாந்து.

0

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காம் போட்டியானது சிட்னியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி ஜானி பேர்ஸ்டோவின் சதத்தின் உதவியுடன் 294 ரன்களை எடுத்தது.

பின்னர் இரண்டாம் இன்னிங்சில் 122 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 388 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஹமீது ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேவிட் மலன் 9 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஜோ ரூட் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இக்கட்டான சூழலில் தோல்வியில் இருந்து அணியை மீட்க பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இருவரும் போராடினர்.

எனினும் ஸ்டோக்ஸ் 60 ரன்னும் பேர்ஸ்டோ 45 ரன்னும் எடுத்த நிலையில் அவுட்டாகினர்.

இதனால் போட்டி ஆஸ்திரேலியாவின் பக்கம் சென்றது.

இங்கிலாந்து அணியில் கடைசி நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட ஜாஸ் பட்லர் 11 ரன்னில் அவுட்டானபோது, ஆஸ்திரேலிய வீரர்கள் ஆர்ப்பரித்தனர்.

ஆட்டத்தின் கடைசி இரு ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் எடுத்தால் என்ற நிலையில், ஆட்டத்தில் மிகவும் பரபரப்பு காணப்பட்டது. இதையடுத்து பிராடும், ஆண்டர்சனும் தலா ஒரு ஓவர்கள் தாக்குப்பிடித்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினர்.

இதனால் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் என எதிபார்க்கப்பட்ட ஆட்டத்தை போராடி டிரா செய்தது இங்கிலாந்து அணி.

Leave A Reply

Your email address will not be published.