அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பதிப்பு எதிரொலி :
திருச்சியில் முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா மூடல்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அரசு விடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, திருச்சியில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களான முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ட்டவை மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், இதனால் மேலும் சில விதிமுறைகளுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
பொது இடங்களில் சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்ட நடைமுறைகளையும் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளன.
திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளன.
அந்த வகையில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தடுக்கும் விதமாக சுற்றுலா மையங்களையும் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருச்சியில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களான முக்கொம்பு மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்டவைகளும் மூடப்பட்டுள்ளன.
சனி , ஞாயிறு கிழமைகளில் மட்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவித்து விளம்பர தட்டிகளை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.