Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பாங்க் ஆப் மகாராஷ்டிரா சார்பில் ரீடைல் மற்றும் எம்எஸ்எம்இ ஆவுட்ரீச் திட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு.

0

பேங்க் ஆப் மகாராஷ்டிரா சார்பில் ரீடைல் மற்றும் எம்எஸ்எம்இ அவுட்ரீச் திட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


பேங்க் ஆப் மகாராஷ்டிரா
வங்கியின் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி மற்றும் மதுரை பிரிவு சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி பேங்க் ஆப் மகாராஷ்டிரா தலைமை அலுவலக பொதுமேலாளர் ஸ்ரீவத்சவா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவீந்திரன்,சென்னை மண்டல மேலாளர் ராஜேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

முதன்மை மேலாளர் சேராகுலா யுகேஷ் எம்எஸ்எம்இ திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றினார்.
ரீடெய்ல் பிரிவு முதன்மை மேலாளர் ராஜு விளக்க உரையாற்றினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பேங்க் ஆப் மகாராஷ்டிரா அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து பொது மேலாளர் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கடந்த நான்கு காலாண்டு முடிவுகளில் பேங்க் ஆப் மகாராஷ்டிரா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான (எம்எஸ்எம்இ) பல்வேறு திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்திற்கு எம்எஸ்எம்இ நிறுவனங்கள்தான் முக்கிய பங்காற்றுகிறது.

இதன் காரணமாக பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் எம்எஸ்எம்இ கடன் திட்டங்களுக்கு 6.8 சதவீதமாக வட்டி குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளை விட எங்களது வங்கியில் தான் வட்டி குறைவு. வீட்டுக்கடன் 6.4 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

ரீடெய்ல், எம்எஸ்எம்இ, விவசாயம் ஆகிய மூன்று துறைகளுக்கும் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடன் வழங்கப்பட்டது. அதாவது மொத்தம் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதில் இந்த மூன்று துறைகளுக்கு மட்டும் 63 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆப் மகாராஷ்டிராவுக்கு நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது. எனினும் தமிழகத்தில் 46 கிளைகள் மட்டுமே உள்ளது. மேலும் 20 கிளைகள் புதிதாக தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பேங்க் ஆப் மகாராஷ்டிரா ஒரு பொதுத்துறை வங்கி என்றாலும், கிளைகள் குறைவு என்பதால் வங்கியின் செயல்பாடு, திட்டங்கள், எம்எஸ்எம்இ திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எளிதில் சென்றடைய முடியவில்லை.

ஆகையால் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வங்கியின் திட்டங்கள் வாடிக்கையாளர்களையும், பொது மக்களையும் சென்றடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

புதிதாக தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கப்படுகிறது. எவ்வித பிணையும் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.