திருச்சியில் பேட்ரிக் ராஜ்குமார் ஏற்பாட்டில் 400 பேருக்கு நலத்திட்ட உதவி. திருநாவுக்கரசர் எம்பி வழங்கினார்.
திருச்சியில் கிறிஸ்துமஸ் விழாவில் 400 பேருக்கு நலத்திட்ட உதவி
சு.திருநாவுக்கரசர் எம். பி. வழங்கினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு சார்பில் திருச்சி அருணாச்சல மன்றத்தில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாநில காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார் தலைமை தாங்கினார் .
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் திருச்சி பாராளுமன்ற தொகுதி எம். பி.யுமான சு. திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி 400 ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளி மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கி பேசினார்.
விழாவுக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஜவகர், கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் மன்சூர் அலி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுபேர் அலி, ஏ.ஐ.சி.சி. உறுப்பினர் சந்திரன், பேராயர்கள் ஸ்டீபன்,பிரான்சிஸ், மாநிலச் செயலாளர் வக்கீல் சரவணன், மலர் வெங்கடேசன், பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.ஆர். பென்னட் ,கோட்டத் தலைவர்கள் ரவி, சிவாஜி சண்முகம், ஜெரால்டு, ராஜ்மோகன் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முருகேசன், உறந்தை செல்வம் , பழனி முத்து விஜயன் ,வில்ஸ் முத்துக்குமார் பாலசுப்பிரமணி மற்றும் திரளான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.