திருச்சியில் தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு, திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கேஎன்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி,மாநகர செயலாளர் அன்பழகன்,
செயற்குழு உறுப்பினர் செவந்திலிங்கம், டோல்கேட் சுப்ரமணி, பகுதி செயலாளர்கள் கண்ணன்,
காஜாமலை விஜய், மோகன்தாஸ், இளங்கோ, ராம்குமார், மாவட்ட துணைச் செயலாளர் விஜயா ஜெயராஜ்,
டாக்டர் சுப்பையா பாண்டியன்,
முத்துச்செல்வம்,கிராப்பட்டி செல்வம், பாலமுருகன்,மண்டி சேகர், போக்குவரத்து தொ.மு.ச. குணசேகரன், பி.ஆர்.பாலசுப்பிரமணியன், ராமதாஸ்,பந்தல் ராமு, மணிமாறன், மூவேந்திரன், லயன் ஜெயப்பிரகாஷ். மற்றும் தனசேகர், மார்சிங்பேட்டை செல்வராஜ், புஷ்பராஜ், சுரேஷ், பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.