திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 34வது நினைவு தினத்தை முன்னிட்டு சோமரசம்பேட்டையிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி கலந்து கொண்டு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.கே. பாலசுப்ரமணியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட பொருளாளர் சேவியர் ,ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், முத்துக்கருப்பன் ,
ஆம்பூர் ஜெயராமன், மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.