எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு நிர்வாகிகள் அனைவரும் நலத்திட்டங்கள் வழங்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வேண்டுகோள்.
எம்ஜிஆரின் 34-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக நிறுவனத்தலைவர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
அவர்களின் 34-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு
மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட
ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழகம் சார்பில்
அந்தந்த பகுதிகளில் உள்ள திருவுருவ படத்திற்கும், திருவுருவ சிலைகளுக்கும் மாலை
அணிவித்து, மரியாதை செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
வழங்கிடவும்.
இந்த நிகழ்வுகளில் மாவட்ட கழக நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர்.
இளைஞர் அணி, மகளீர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் அணி, மருத்துவ அணி, இலக்கிய அணி,
அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, வர்த்தக அணி பகுதி கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மற்றும்
செயல்வீரர்கள் வீராங்கணைகள், மற்றும் கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளும், தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

