Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உலக சிலம்பம் சம்மேளனம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி திருச்சி தேசியக் கல்லூரியில் நடைபெற்றது

0

திருச்சி தேசியக் கல்லூரியில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி.

சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி திருச்சியில் உள்ள தேசிய கல்லூரியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ,பாண்டிச்சேரி, அசாம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியானது போர் சிலம்பம், அலங்காரச் சிலம்பம், இரட்டை சிலம்பம், தொடு சிலம்பம் என்ற பிரிவுகளின்கீழ் நடைபெற்றது.

இந்த போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு மற்றும் வீராங்கனைகளுக்கு சிலம்பம் உலக சம்மேளனத்தின் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற சிலம்ப வீரர்கள், வீராங்கனைகள் வருகிற மார்ச் மாதம் நடைபெறவுள்ள தெற்காசிய மற்றும் ஆசிய சிலம்பம் போட்டிகளில் பங்கு பெற வாய்ப்புகள் வழங்கப்படும் .

இந்த தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் சிறப்பு விருந்தினராக தமிழக சிறப்பு ஒலிம்பிக் பாரத்தின் இயக்குனர் மற்றும் செயலாளர் மேலும் தேசிய கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பிரசன்னா பாலாஜி ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி போட்டியை துவக்கி வைத்தனர்.

இந்த போட்டியின் முடிவில் சிலம்ப உலக சம்மேளத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சங்கர் கூறியபோது .,

நமது பாரம்பரிய கலையான சிலம்ப கலையை பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியருக்கு கட்டாய பாடமாக்க வேண்டும்.

மேலும் சிலம்பம் மாணவர்கள் தொடர்ந்து பயிற்சி பெறுவதற்கு அயல் நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தார். பேட்டியின் போது அருகில் ஒருங்கிணைப்பாளர் பத்மா, தேசிய அளவில் சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளில் பல பதக்கங்கள் பெற்ற குழந்தை வீராங்கனை கராத்தே லீனா,கராத்தே கிஷோர் மற்றும் வீரர்-வீராங்கனைகள்

Leave A Reply

Your email address will not be published.