ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து பேரவைக் கூட்டத்தில் தீர்மானம்.
அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க ஆண்டு பேரவை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் சோமசுந்தரம் நினைவரங்கத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு
சம்மேளன குழு உறுப்பினர் முத்துவேல் தலைமை தாங்கினார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார்.
மத்திய சங்க உதவி செயலாளர் ஜெயராமன, உதவி தலைவர் நடராஜன், சிஐடியு சிவகங்கை மாவட்ட செயலாளர் சேதுராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
எஸ்.சி.டி. சி, சிஐடியு பொதுச்செயலாளர் கனகராஜன் நிறைவுரை ஆற்றினார்.
கூட்டத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை அரசு உடனே துவங்க வேண்டும்.
தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போதே அனைத்து பண பலன்களையும் அரசு வழங்கவேண்டும்.

அரசு பேருந்துகளுக்கு சுங்க கட்டண விலக்கு அளிக்க வேண்டும்.
கேண்டீனில் தரமான உணவு,சுகாதார முறையில் வழங்க வேண்டும்.
ஓட்டுனர் நடத்துனர்கள் சென்னைக்கு வந்து வண்டி வாங்கும் பொழுது உடனடியாக வண்டியை கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
நான்கு மணி நேரம் ஐந்து மணி நேரம் காக்க வைத்து வண்டியை கொடுப்பது மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.
அதற்கு தனியாக வருகைப்பதிவு வழங்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக சரவணன்,
செயலாளராக டபுள்யூ. ஐ. அருள்தாஸ்,
பொருளாளராக மகேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
முடிவில் துணைத் தலைவர் ராமையா நன்றி கூறினார்.