இந்திய அரசாங்கம் பணம் சம்மந்தப்பட்ட பரிவர்த்தனைக்கு ஆன்லைன் தளங்களை ஊக்குவிக்கிறது.
அதேவேளையில் உலக அளவில் பிட்காயின் மதிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் அனைத்து வல்லுனர்களையும் ஆச்சரியப்படுத்தியது.
பொதுவான வங்கி சார்ந்த பண பரிவர்த்தனைகளுக்கு நேரெதிரான மற்றும் முற்றிலும் இணையம் சார்ந்த மின்னணு பண பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி வகையை சார்ந்த பிட்காயினானது உலகம் முழுவதும் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.
டிஜிட்டல் நாணயங்களில் பிரபலமானதாக அறியப்படும் ‘பிட்காயின்’ மதிப்பு செப்டம்பர் மாத இறுதிக்கு பிறகு தற்போது மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
அதன் விலை ஒரே இரவில் 20 சதவீதம் வரை குறைந்தது. 57 ஆயிரத்து 600 டாலர்களாக இருந்த ‘பிட்காயின்’ விலை 42 ஆயிரம் டாலர்களுக்கு குறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.