Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இதழியல் சான்றிதழ் பெற்ற விஜய் கார்த்திக்கை வாழ்த்திய ஜெ.கே.சி.அறக்கட்டளை நிறுவனர் முனைவர்.ஜான் ராஜ்குமார்

0

'- Advertisement -

பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே சென்னையில் பாண்டே ஸ்கூல் ஆப் ஜர்னலிசம் என்ற பெயரில் இதழியல் சான்றிதழ் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.

Ad banner

இந்த பயிற்சி மையம் முலம் தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமானோர் இதழியல் வகுப்பு பயின்று வருகின்றனர் .

இந்த சான்றிதழ் பயிற்சி வகுப்பின் 3ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா சென்னை
ராஜ்ப்பேலஸ் வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ராணுவ அதிகாரி தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சியினை வெற்றிகரமாக முடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பயிற்சி மையத்தின் நிறுவனரும், பத்திரிகையாளருமான ரங்கராஜ் பாண்டே தலைமை வகித்தார்.

பயிற்சி மைய பதிவாளர் காயத்ரி முன்னிலை வகித்தார்.இந்த மையத்தில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த பயிற்சி மையத்தில் திருச்சியை சேர்ந்த பிரபல திமுக பிரமுகரும்,அகில இந்திய சித்த மருத்துவ சங்க தலைவருமான கே.எஸ்.சுப்பையா பாண்டியன்- டாக்டர் தமிழரசி மகனும் சித்த மருத்துவருமான விஜய் கார்த்திக் ஓரோண்டு படித்து முடித்தற்க்கான இதழியல் சன்றிதழை பெற்றார்.

இவர் கடந்த ஓர் ஆண்டாக இந்த பயிற்சி மையத்தில் இதழியல் கல்வியை சிறப்பாக பயின்றார்.

பயிற்சியினை வெற்றிகரமாக முடித்து சான்றிதழ் பெற்ற விஜய்கார்த்திகை ரங்கராஜ் பாண்டே, தியகராஜன், உள்ளிட்ட அனைவரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சான்றிதழ்களுடன் திருச்சி திரும்பிய சித்த மருத்துவரான விஜய் கார்த்திகை ஜே.கே.சி. அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர். ஜான் ராஜ்குமார் பொன்னாடை போற்றி தனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து புத்தகமும் பரிசாக வழங்கினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.