பசுமை திருமண பத்திரிக்கை உருவாக்கியவர்களுக்கு தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கத்தினர் பாராட்டு.
திருமணம் என்றாலே ஏராளமான செலவுகள் சூழந்து கொள்ளும் .அதில் பல செலவுகள் பயனற்றும் போவதும் உண்டு.
அதில் திருமண அழைப்பிதழ் என்பதை தங்களது செல்வச் செழிப்பைக் காட்டும் கண்ணாடியாகப் பலரும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த நிலைமையை மாற்றி ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் .
” எவ்வளவு விலை கொடுத்து அழைப்பிதழை பிரிண்ட் செய்தாலும் ‘திருமணம் முடிந்த பிறகு அது குப்பைக்குத் தான் செல்லும்”
பத்திரிக்கை
குப்பை சென்றாலும் அது செடியாகி, பூவாக வேண்டும் என்ற நோக்கில் திருமண பத்திரிக்கையிலே விதை வைத்து பசுமை திருமண பத்திரிக்கை அடித்து இருக்கிறார்.
சுற்றுச் குழல் ஆர்வலர் “ஷைன் திருச்சி ” மனோஜ் தர்மர் .
திருமண பத்திரிக்கை படித்து பார்த்து விட்டு மண்ணில் போட்டு நீர் ஊற்றினால் சில தினங்களில் தானாக செடியாக அல்லது சிறிய தாவரமாக வளர்ந்து விடுமாம் .
திருமண பத்திரிக்கையில் விதை உடன் அச்சிட்டு அதை மண்ணில் வைத்து தண்ணீர் ஊற்றினால் செடியாகவும் என்று சுற்றுச்சூழல் காக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திருமண பத்திரிக்கை புதிய விழிப்புணர்வு உருவாக்கும் பசுமையான நவீன திருமண பத்திரிக்கை .
இந்த இயற்கை காக்கும் வகையில் உருவாக்கி நவீன திருமண அழைப்பிதழை தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே சி. நீலமேகம் சார்பிலும் பாராட்டுகளுடன் வாழ்த்துகளையும் தெரிவித்து உள்ளனர்.