Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தொடர் உண்ணாவிரதத்தில் மூன்றாம் நாளான நாளை சாக்கடையில் படுத்துப் போராட்டம் அய்யாக்கண்ணு அறிவிப்பு.

தொடர் உண்ணாவிரதத்தில் மூன்றாம் நாளான நாளை சாக்கடையில் படுத்துப் போராட்டம் அய்யாக்கண்ணு அறிவிப்பு.

0

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3- வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றி கொன்ற மத்திய மந்திரி மகன் உள்ளிட்டவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க கோரியும். காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்த 10 லட்சம் நெல்மணி மூட்டைகளை தமிழக அரசு உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட

கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 2-ம் நாளான இன்று விவசாயிகள் கோவணம் கட்டி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும்போது….

மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துவதற்கு நாங்கள் உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்றிருக்கிறோம். இருந்தபோதிலும் போலீசார் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டத்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும் பெண்களுக்கு கருத்தரித்தலில் பிரச்சனையும் ஏற்படும் நிலை உள்ளது.ஆகவே தான் இந்த சட்டத்துக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

46 உண்ணாவிரத போராட்டத்தில் முடிவு கிடைக்க விட்டால் சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் உத்தரவு பெற்று டெல்லி சென்று போராட உள்ளோம்.

மேலும் நாளை தொடர் உண்ணாவிரத போராட்டத்தின் மூன்றாம் நாளில் பிளக்ஸ் போர்டு வைக்க அனுமதி அளிக்காததால் அந்த பிளக்ஸ் போர்டு உடன் விவசாயிகள் சாக்கடையில் இறங்கி அங்கேயே படுத்து, சாக்கடை தண்ணீர் குடித்து எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க உள்ளோம் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.