3 நாட்களாக மயங்கி கிடந்த முதியவரை மீட்ட மக்கள் சக்தி இயக்கம் மற்றும் ஸ்ரீ ஃபவுண்டேஷன்
3 நாட்களாக மயங்கி கிடந்த முதியவரை மீட்ட மக்கள் சக்தி இயக்கம் மற்றும் ஸ்ரீ ஃபவுண்டேஷன்
மூன்று நாட்களாக சுயநினைவின்றி மயங்கிய நிலையில் இருந்த முதியவர் மீட்பு.
மரித்து விட்டதா மனிதநேயம்
திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை பேருந்துகள் நிற்கும் இடம் அருகில் மூன்று நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் சுயநினைவு இன்றி மயங்கி கிடந்து உள்ளார்.
மாநகராட்சியில் சொல்லியும் பயன் இல்லை!
108 ஆம்புலன்ஸ்க்கு சொல்லியும் நாங்கள் மருத்துவமனைக்கு கொன்டு செல்ல மாட்டோம் என்று கைவிரித்து விட்டனர்.
மனித உயிருக்கு மதிப்பு இவ்வளவு தானா? என்று மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகத்துக்கு வாமும் கலை அமைப்பு மாவட்ட செயலாளரும் தண்ணீர் அமைப்பு நிர்வாகிருமான செல்வம் தெரிவிக்க கே.சி. நீலமேகம் ஸ்ரீ ஃபவுண்டேஷனுக்கு வாட்சாப் மூலமாக தெரிவித்தார்.
உடனடியாக களத்தில் ஸ்ரீ ஃபவுண்டேஷனின் மீட்பு குழு சென்று பார்வையிட்டு கொண்டிருந்த போதே நீலமேகம் சென்று விட்டார்.
சளி மற்றும் வாந்தி எடுத்து மிகுந்த துர்நாற்றத்துடன் அதன் மீதே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த முதியவரை ஸ்ரீ ஃபவுண்டேஷனின் மீட்பு குழு எவ்வித சங்கடமும் இல்லாமல் அவரை காவல்துறை உதவியோடு மீட்டு உடலை சுத்தம் செய்து, புத்தாடை மாற்றி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
இந்த நிகழ்வில் தகவல் தெரிவித்ததோடு நிற்காமல் ஒப்பற்ற ஒரு உயிரை காப்பாற்ற முழுவதும் உடன் இருந்து உதவிய மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர்
கே.சி.நீலமேகம் அவர்களுக்கும்
கண்டோன்மென்ட் காவல் நிலைய அனைத்து காவலர்களுக்கும்
108 ஆம்புலேன்ஸ் சர்விஸ்க்கும்
ஸ்ரீ ஃபவுண்டேஷன் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
நீங்களும் பாரட்ட நினைத்தால்
கிருஷ்ணன்,
ஸ்ரீ ஃபவுண்டேஷன்
+91 99 44 00 66 88
கே.சி.நீலமேகம்
94433 01713