கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர். கோட்டைவிட்ட காவல்துறையினர் காப்பாற்றிய பத்திரிகையாளர்கள்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர். கோட்டைவிட்ட காவல்துறையினர் காப்பாற்றிய பத்திரிகையாளர்கள்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள் தோறும் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிலையில் கூட்ட அரங்கின் முன்பு முசிறி தண்டலை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் பெரியசாமி என்பவர் தனது மனைவியை மீட்டுத் தரக்கோரி யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென தன் மீதும் தனது இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் மகன் ஆகியோரின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செய்தி செய்தி சேகரித்துக் கொண்டிருந்த நியூஸ் 7 டிவியின் நிருபர் நெப்போலியன் மன்னனை கேனை தட்டிவிட வரலாறு நாளிதழின் நிருபர் முனீஸ்வரன் பெரியசாமி கையில் இருந்த தீப்பெட்டியை பிடிங்கினார்.
இவர்களுடன் மக்கள் கோட்டை நாளிதழின் நிருபர் பாலு, தமிழ் சுடர் நாளிதழின் நிருபர் ஆனந்த் ஆகியோர் விரைவாக செயல்பட்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற குடும்பத்தை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்,
இது போன்ற சமூக நலனில் அக்கறை கொண்டு பத்திரிக்கைத் துறையில் சிறப்பாக பணியாற்றிவரும் நிருபர்களை பொதுமக்கள் சார்பிலும் மற்றும் திருச்சி எக்ஸ்பிரஸ் சார்பிலும் பாராட்டுகிறோம்.
அதே நேரத்தில் கலெக்டர் அலுவலகம் வாயில்களில் காவல்துறையினர் பலத்த சோதனைக்கு பின்பே பொதுமக்களை உள்ளே அனுமதிக்கும் வேளையில் 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேனுடன் இவர்கள் உள்ளே நுழைந்தற்க்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.