Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் இராம்விலாஸ் பஸ்வானின் நினைவு தினம் நாடங்கும் அனுசரிப்பு.

லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் இராம்விலாஸ் பஸ்வானின் நினைவு தினம் நாடங்கும் அனுசரிப்பு.

0

இராம்விலாஸ் பஸ்வானின் நினைவுதினம் நாடெங்கும் அனுசரிப்பு.

சமூக நீதிப் போராளி, மண்டல் நாயகன் ராம்விலாஸ் பஸ்வானின்  நினைவுதினம் நேற்று நாடெங்கும் அனுசரிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில்
1990 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கை, இந்தியாவில் மாபெரும் சமுகப்புரட்சியை உருவாக்கியது.

பின் தங்கிய சமூகங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை ஒளிமயமானதாக மாறுவதற்கு வழிவகை செய்தது இந்த வரலாற்று நிகழ்வு. அந்த சமுகப்புரட்சியின் சூத்திரதாரியாக செயல்பட்டவர் அப்போதைய சமூகநலத்துறை அமைச்சர், மக்கள் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் தான்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்த ராம் விலாஸ் பஸ்வான் மேற்கொண்ட துணிச்சலான நடவடிக்கைகளால் தான், கோரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரம் இழந்த பல கோடி ஏழை மக்கள் பசியின்றி வாழ முடிந்தது.
அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக அர்ப்பணித்து வாழ்ந்த மகத்தான தலைவர் ராம் விலாஸ் பஸ்வான்.

கடந்த 2020 ஆம் ஆண்டு, அக்டோபர் 8 ஆம் தேதி காலமான பின் அவர் தோற்றுவித்த லோக் ஜனசக்தி கட்சிக்கு அவரது இளைய சகோதரர் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பசுபதி குமார் பார்ஸ் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.

அக்டோபர் 8 ஆம் தேதி மண்டல் நாயகன் ராம்விலாஸ் பாஸ்வானின் முதலாம் ஆண்டு நினைவுதினம் என்பதால், இந்த நாளில் மக்கள் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடத்தப்பட்டன்.

பாட்னாவில் நடைபெற்ற நிகழ்வில் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் பசுபதி பாரஸ் பஸ்வான் அவர்களுடன், லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜி.வி. மணிமாறன் மற்றும் திருச்சி குமார், தமிழ் மாநில தலைமைப் பொதுச்செயலாளர் கலந்து கொண்டனர்;

முன்னதாக கடந்த 6 ஆம் தேதி சென்னை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மண்டல் நாயகன் அமரர் ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களின் திருவுருவச்சிலையை லோக் ஜனசக்தி கட்சியின் தமிழக தலைவர் சத்தியசீலன் முன்னிலையில் லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜி.வி. மணிமாறன் திறந்து வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.