திருச்சி எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி. காட்டுரில் அங்கன்வாடி மையம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கும், திருச்சி எக்ஸ்பிரஸ் மின் இதழுக்கும் பொது மக்கள் பாராட்டு.
திருச்சி எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி. காட்டுரில் அங்கன்வாடி மையம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கும், திருச்சி எக்ஸ்பிரஸ் மின் இதழுக்கும் பொது மக்கள் பாராட்டு.
அரியமங்கலம் தெற்கு காட்டூரில் உள்ள பர்மா காலனி, குறிஞ்சி நகர் இப்பகுதியில் (பால்வாடிபள்ளி ) அங்கன்வாடி மையம் தொடங்க பொதுமக்கள் சார்பாக
திருச்சி எக்ஸ்பிரஸ்
முலம் செப்டம்பர் 14ம் அமைச்சருக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இதனை அன்றே உடனடியாக நிறைவேற்றுவதாக உடனடியாக கூறினார்,
இதனை தொடர்ந்து 23 நாட்களில் தூரிதமாக செயல்பட்டு அப்பகுதியில் இன்று அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.
தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் பொன்மலை பகுதி 28 வார்டில் இந்த அங்கன்வாடி திறப்பு விழா நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட் ஆட்சித்தலைவர் சு.சிவராசு , மாநகராட்சி அரியமங்கலம் உதவி ஆணையர் கமலக்கண்ணன், பொன்மலை பகுதி செயலாளர் இ.எம்.தர்மராஜ் மற்றும் வட்ட நிர்வாகிகள் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கும்
(அமைச்சருக்கு நாம் அனுப்பிய செய்தியும் அவர் நமக்கு அனுப்பிய பதிலும், )
வேண்டுகோளை செய்தியாக வெளியிட்ட திருச்சி எக்ஸ்பிரஸ் மின் இதழ்க்கும் அப்பகுதி மக்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.