கவுதம் அதானி துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்.என்.ஐ.ஏ விசாரணை.
கவுதம் அதானி துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்.என்.ஐ.ஏ விசாரணை.
குஜராத்தில் உள்ள முந்திரா துறைமுகத்திற்கு சமீபத்தில் சுண்ணாம்புக்கல் என்ற பெயரில்
ஆப்கானிஸ்தானில் இருந்து சரக்குகள் வந்தன.
அவற்றை சோதனை செய்ததில், அவற்றில் 2,988 கிலோ ஹெராயின் என்ற போதை பொருள் இருந்துள்ளது.
இவற்றின் மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது.
தொழிலதிபர் கவுதம் அதானி நிர்வகித்து வரும் துறைமுகத்தில் இந்த போதைப்பொருள் சிக்கியுள்ளது.
இதனை தொடர்ந்து இதுபற்றிய வழக்கை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை)
விசாரணை மேற்கொள்ளும்படி, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அதன்பேரில், தடை செய்யப்பட்ட ஹெராயின் போதை பொருள் சிக்கிய வழக்கை என்.ஐ.ஏ. விசாரணை நடத்த உள்ளது.