திருச்சி மாநகராட்சியில் குப்பையில் இருந்து மறுசுழற்சி மூலம் கைவினை பொருட்கள் கண்காட்சி.
திருச்சி மாநகராட்சியில் குப்பையில் இருந்து மறுசுழற்சி மூலம் கைவினை பொருட்கள் கண்காட்சி.
திருச்சி மாநகராட்சியில் குப்பைக் கழிவுகளில் இருந்து மறுசுழற்சி மூலம் கைவினைப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்.
திருச்சி மாநகராட்சி சாா்பில் 75வது சுதந்திர தினத்தையொட்டி மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் வீட்டிலிருந்து உற்பத்தியாகும் குப்பைக் கழிவுகளிலிருந்து சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில் பொதுமக்கள், மறுசுழற்சி உற்பத்தியாளா்கள், கைவினைப் பொருள் கலைஞா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா் தங்களது கைவினைப் பொருள்களான காகித பூக்கள், தேங்காய் நாரின் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள், வீட்டில் உள்ள பழைய துணிகளைக் கொண்டு பொம்மைகள், தலையனை உரைகள், துணி நாப்கின், வீடு அமைப்புகள் அட்டை பெட்டி மூலம் தயாரிக்கப்பட்ட வீட்டின் அமைப்புகள்,
பிளாஸ்டிக் பாட்டில் மூலம் தயாரிக்கப்பட்ட வீட்டின் அலங்கார பொருட்கள், இயற்கை வண்ணங்களை கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள்,
பேப்பர் மற்றும் துணி பைகள் உள்ளிட்ட மக்களின் மனதை கவரும் வகையில் பல்வேறு கைவினைப்பொருட்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்று உள்ளது.
இந்த கைவினைப் பொருட்களின் கண்காட்சியை மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரஹ்மான் தொடங்கி வைத்தார்.