மறைந்த தொழில் அதிபர் கே .என். ராமஜெயத்தின் 60வது பிறந்தநாளையொட்டி அவரது திருஉருவச்சிலைக்கு அமைச்சர் கே. என் .நேரு மாலை அணிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.
ராமஜெயத்தின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் திமுகவினர் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
மறைந்த திருச்சி தொழிலதிபரும், அமைச்சர் நேருவின் சகோதரருமான கே. என்.ராமஜெயத்தின் 60வது பிறந்த நாளையொட்டி திருச்சி கேர் கல்லூரியில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அமைச்சர் கே.என். நேரு தலைமையில் எம்எல்ஏக்கள்
இனிகோ இருதயராஜ், துரைசந்திரசேகரன், காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி,மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன்,
பகுதி செயலாளர்கள் கண்ணன், ராம்குமார், காஜாமலை விஜய், மோகன்தாஸ், மண்டி சேகர்,அந்தநல்லூர் ஒன்றிய சேர்மன் துரைராஜ், ஒன்றிய செயலாளர்கள் கதிர்வேல், மாத்தூர்கருப்பையா, இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், மாநகர அமைப்பாளர் அரவானூர் தர்மராஜன்,தொழில் அதிபர் ஜான்சன் குமார், புத்தூர் தர்மராஜ்.வேங்கூர் தனசேகர், இன்ஜினியர் ஆனந்த் , இ.பி.ரோடு மனோஜ், துரைப்பாண்டியன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்தனர்.

