திருச்சியில் புதிய மல்ட்டி
விளையாட்டு மையம் தொடக்கம்.
திருச்சியில் அனைத்து விதமான விளையாட்டுகளுக்கும் பயிற்சி பெறும் வகையில் பி பிட் மல்ட்டி ஸ்போர்ட் அரெனா என்ற பெயரில் புதிய விளையாட்டு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பி பிட் விளையாட்டு அகாதெமி சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்தில் அத்லெட்டிக், கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விதமான விளையாட்டுகளுக்கும் சர்வதே தரம் வாய்ந்த பயிற்சிகள், சர்வதேச விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுநர்களைக் கொண்டு வழங்கப்படவுள்ளது,
இந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற, தற்போது பல்வேறு பதவிகளில் உள்ள பயிற்றுநர்கள் சிறார் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பயிற்சி அளிக்கவுள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற பயிற்சி மைய தொடக்க நிகழ்வினை
பி.கிட்டப்பா தொடங்கி வைத்தார். ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஜோசப்கென்னடி, பெர்க்மென், ஸ்ரீ ஸ்போர்ட்ஸ் நிர்வாகி மோகன்ராஜ், மிஸ்டர் இந்திய உன்னிகிருஷ்ணன், பயிற்றுநர்கள் முத்துசாமி, அஜித் பெரரியா, சசிக்குமார், பி பிட் மேலாளர் சேவியர், பி பிட் நிறுவனர் ஆ. பாக்கியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியருக்கு சலுகைக் கட்டணத்தில் சர்வதேச தரத்தில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாக நிறுவனர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்..