1.
திருச்சி பிராட்டியூரில்
வியாபாரியை தாக்கிய
4 பேர் மீது வழக்கு
திருச்சி பிராட்டியூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் குருமூர்த்தி. (வயது 22) இவர் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் வியாபாரி.
இவர் சம்பவத்தன்று பிராட்டியூரில் உள்ள ஒரு டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் முன்விரோதத்தில் இவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து ஹரிஹரன் , விச்சு, ராஜகுரு ,குணா ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2.
மனைவி இறந்த விரக்தியில்
மகன், மகளுடன் மாயமான தந்தை.
திருவரங்கம் போலீசார் விசாரணை.
திருச்சி திருவானைக்காவல் வங்கி காலனியை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் வைத்தியநாதன் ( வயது 46) இவருக்கு தாயுமான சர்மா (வயது20)என்ற மகனும், சுபிக்ஷா (வயது17) என்ற மகளும் உள்ளனர்.
சமீபத்தில் வைத்தியநாதனின் மனைவி இறந்து விட்டார். இதனால் மன உளைச்சல் மற்றும் விரக்தியில் இருந்த வைத்தியநாதன் கடந்த 17 ஆம் தேதி தனது மகன், மகளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வைத்தியநாதனின் சகோதரர் முரளிகிருஷ்ணன் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்குப்பதிந்து மாயமான வைத்தியநாதன் , அவரது மகன் தாயுமான சர்மா மற்றும் அவரது மகள் சுபிக் ஷா ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்.
3.
திருச்சி இபி ரோட்டில்
தூக்குபோட்டு
கொத்தனார் சாவு
திருச்சி இபி ரோடு உப்பிலிய தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மாரிமுத்து (வயது 34) கொத்தனார். இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டு உத்திரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார் .
உடனே அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.