முதுநிலை ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு.அரசாணையை திரும்பப் பெற கல்வியாளர், பேராசிரியர். முத்தமிழ்ச்செல்வன் கோரிக்கை.
முதுநிலை ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு அரசாணையை திரும்ப பெற கல்வியாளரும், கேர் கெமிஸ்ட்ரி சென்டர் உரிமையாளருமான பேராசிரியர் முத்தமிழ்ச் செல்வன் அரசுக்கு கோரிக்கை.
முதுநிலை ஆசிரியப்பணிக்கு வயது வரம்பு நிர்ணயித்து வெளியிடப்பட்ட அரசாணையை புதிய அரசு திரும்ப பெற ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இதில் உயர்நிலை கல்விக்கு பாடம் நடத்திட இளங்கலை ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) மூலமும், மேல்நிலை மாணவர்களுக்கு பாடம் நடத்திட முதுநிலை ஆசிரியர் தேர்வு (PG TRB) மூலமும் நியமிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் காலி பணியிடங்களுக்கு 50 சதவீத ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வாணையம் மூலமும், 50 சதவீதம் ஆசிரியர்களை பணி மூப்பு அடிப்படியிலும் நியமிக்கப்படுகிறார்கள்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு TET சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்கது என்ற அரசாணையை 23.8.2021 அன்று அரசு வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 59 வயது வரை ஆசிரியர் பணியில் சேர முடியும்.
அதே சமயம் முதுநிலை ஆசிரியர்களுக்கு தேர்வு எழுதிட வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
11.02.2021 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் 2098 பணியிடங்களுக்கு தேர்வு அறிக்கையை வெளியிட்டது.
அதன்படி பொதுப்பிரிவினருக்கு தேர்வு எழுத வயது வரம்பு 40 வயது என்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு 45 வயது என்றும் அரசாணையை குறிப்பிட்டது.
(G.O.No. 14 School Education SED(1), 30.1.2021) இதன்படி 40 வயதுக்கு மேற்பட்டோர் தேர்வு எழுத தகுதி அற்றவர்கள் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
தமிழகத்தில் 754 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 747 கல்லூரிகளில் B.Ed., சேர்க்கை நடந்து வருகிறது.
இக்கல்லூரிகள் மூலம் ஆண்டிற்கு 78,250 பேரும், 14 கல்லூரிகளில் நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பின் மூலம் 1250 பேர் என ஒவ்வொரு ஆண்டும் 79,500 பேர் ஆசிரியர் பயிற்சினை முடிக்கின்றனர்.
மேலும் தமிழகத்தில் உள்ள 8 தனியார் பல்கலைக்கழகங்கள், இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் என ஒவ்வொரு ஆண்டும் 90,000 பேர் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வெளியேறுகின்றனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் நியமனம் நடத்தப்பட வேண்டும் என்றாலும் கூட நடைமுறையில் இரண்டாண்டுக்கு ஒரு முறையே நடத்தப்படுகிறது.
அதிலும் 1000 முதல் 2000 வரை ஆசிரியர்கள் தேர்வு மூலம் நியமிக்கப்படுகின்றன.
ஏனைய ஆசிரியர்கள் என்றாவது ஒருநாள் அரசு பணியேற்போம் என்ற நம்பிக்கையில் தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
வயது வரம்பிற்கான இந்த அரசாணை மூலம் அவர்களின் எதிர்காலம் இருள் சூழ்ந்து உள்ளது. ஏற்கனவே பணியின் ஓய்வு வயதை 58லிருந்து 60ஆக உயர்த்தியதால் பல ஆயிரம் புதிய ஆசியர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் அவர்கள் தேர்தலுக்கு முன் புதுக்கோட்டையில் நடைப்பெற்ற உங்கள் தொகுதி ஸ்டாலின் எனும் நிகழ்ச்சியில் உறுதியளித்தப்படி முதுநிலை ஆசிரியர்களுக்கானஇந்த வயது வரம்பு அரசாணையை நீக்கி ஆசிரியர் தகுதித் தேர்வைப்போல் 58 வயது வரை முதுநிலை ஆசிரியர்களும் தேர்வு எழுதலாம் என்ற அரசாணையை வழங்கும் படி தாழ்மையு கேட்டுக் கொள்கின்றோம்.
இதன் மூலம் அனுபவமிக்க ஆசிரியர்கள் தமிழக கல்வித்துறை: பணியாற்றி தமிழகத்தை கல்வித்துறையில் உயர்த்த ஒரு நல்வாய்ப்பாக அமையும்
என பேராசிரியர் முத்தமிழ்செல்வன் தனது கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.