Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஏல சீட்டு நடத்தி ஒரு கோடி மோசடி. பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை ஆணையரிடம் புகார்

0

'- Advertisement -

ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி.
பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி காவல்துறை ஆணையரிடம் புகார்.

திருச்சி மலைக்கோட்டை ஜான்தோப்பு, சின்ன கடைவீதி, விசுவாஸ்நகர். சஞ்சீவி நகர், இ.பி ரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் பதிமூன்று பேர் இன்று ஒன்றாக சேர்ந்து வந்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் திருச்சி மலைக்கோட்டை இபி ரோடு பகுதியை சேர்ந்தவர்கள். அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ஏலச்சீட்டு போட்டிருந்தோம். சுமார் 25க்கும் மேற்பட்டோர் சீட்டு வரவு செலவு செய்து வந்தோம். இந்நிலையில் ஏலச்சீட்டு நடத்தி வந்தவர் சமீபத்தில் இறந்து விட்டார்.


நாங்கள் அவரது வீட்டிற்கு அவரது வாரிசுதாரர்கள் இடம் சென்று பணத்தை கேட்டோம்.

ஆனால் அவர்கள் திருப்பி தரவில்லை. பாதிக்கப்பட்ட எங்களிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் வரை அவர் பெற்றுள்ளார்.

இந்த பணத்தை எங்களுக்கு மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.