Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரசு மருத்துவமனைக்கு இன்சூரன்ஸ் ஓய்வூதிய சங்கத்தின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது

0

'- Advertisement -

Ad banner

மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கம், ஓய்வூதியம் பெறுவோர் நலனுக்காக மட்டுமின்றி சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்ற உதவி செய்து வரும் அமைப்பாகும்.

இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் சுகாதாரத்துறை ஊழியர்களின் ஒப்பற்ற பணி போற்றுதலுக்குரியது. பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர்களிடமிருந்து நன்கொடைகளைத் திரட்டி திருச்சி மகாத்மாகாந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பயன்படும் வகையில் ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான 10 சக்கர நாற்காலிகளை அரசு மருத்துவமனை முதல்வர் வனிதாவிடம் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ்
பொது செயலாளர் ரமேஷ், மண்டல இணை செயலாளர் ராஜ மகேந்திரன், மண்டல தலைவர் கோபால்ராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர் ராமநாராயணன், திருச்சி மாவட்ட செயலாளர் ராஜன், மாவட்ட தலைவர் முத்துகுமார், ஓய்வூதியர் சங்கம் பொறுப்பாளர்கள் ஜெயராமன், மணிவேல்,
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் ஜோன்ஸ், பன்னீர்செல்வம், மற்றும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.