ஸ்பெஷல் காலிஃப்ளவர் பொடிமாஸ்.
காலிஃபிளவரில் பக்கோடா, குருமா, பரி, புலாவ் என விதவிதமாக சமைக்கலாம்.
தேவையான பொருட்கள் :
காலிஃப்ளவர் – ஒன்று
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
இஞ்சி புண்டு விழுது – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
உடைத்த கடலை – 1 டீஸ்பூன்
முந்திரி – 1 டீஸ்பூன்
தேங்காய் – கால் கப்
வேர்க்கடலை – 1 டீஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
செய்முறை :
காலிஃப்ளவரை நன்கு துருவி, ஆவியில் வேக விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது, புதினா சேர்த்து வதக்கவும்.
வெந்த காலிஃப்ளவரை சேர்த்து கிளறவும்.
மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
எண்ணெய் விட்டு முந்திரி, வேர்கடலை, உடைத்த கடலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
காலிஃப்ளவருடன் வறுத்த கடலை, தேங்காய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
கொத்தமல்லி தூவி பரிமாறவும். இப்போது சுவையான காலிஃப்ளவர் பொடிமாஸ் தயார்.