அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் 2061 வது இலவச சித்த மருத்துவ முகாம் திருச்சி தில்லைநகர் கார்த்திக் வைத்திய சாலையில் நடைபெற்றது.
இம்மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், சளி இருமல் மருந்துகள்,சத்து மருந்துகள் வழங்கப்பட்டது.
பின்னர் மருத்துவ முகாமிற்கு வந்த அனைத்து பொது மக்களுக்கும் உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டது.
மருந்துகள் மற்றும் உணவு பொட்டலங்களை டாக்டர். சுப்பையா பாண்டியன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் டாக்டர். ஜான் ராஜ்குமார், டாக்டர், தங்கமணி,டாக்டர் .குமார் டாக்டர் முருகேசன் டாக்டர் அருள் முருகன், டாக்டர். சகுந்தலா சந்தானகிருஷ்ணன், டாக்டர்.அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.