ரயில்வே தொழிலாளர்களையும் முன்களப்
பணியாளர்களாக பரிந்துரைக்க வேண்டும்,
ரயில் மஸ்தூர் சங்கம் கூட்டத்தில் தீர்மானம்
ரயில்வே தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என ரயில் மஸ்தூர் யூனியன் சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரயில் மஸ்தூர் யூனியன் சங்கம் சார்பபில், முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பிறந்தநாள் சிறப்பு கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது.
ரயில் மஸ்தூர் யூனியன் சங்க நிர்வாகி புகழேந்தி தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக ரயில்வே தொழிலாளர்களை முன் களப்பணியாளர்களாக அறிவிக்க தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும். அவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 5000 வழங்கவேண்டும்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட குடும்பத்தில் உள்ள ரயில்வே தொழிலாளர்களுக்கு கூடுதல் பணி வழங்கி தொற்று பரவ வழி வகுக்கக் கூடாது.
அப்ரண்டீஸ் பயிற்சியாளர்கள் தேர்வில் ரயில்வே தொழிலாளர்கள் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழக பகுதிகளில் உள்ள ரயில்வே பணியிடங்களில் தமிழக இளைஞர்கள் மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இக்கொள்கையில் உறுதியாக உள்ள தமிழக அரசுக்கு நன்றி.
காத்திருக்கும் அப்ரண்டிஸ் பணி நியமனத்தில் அதிக அளவில் தமிழர்கள் வேலை வாய்ப்பு பெற வழி வகுக்க வேண்டும்.
முன்னாள் ரயில்வே அமைச்சர் ஜார்ஜ்பெர்ணான்டஸ் உறுதிபடுத்திய 25 சதவிகித நேரடி பணி நியமனம் நடைமுறையை பின்பற்ற தமிழக அரசு வழிவகுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.