ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பார்கள்.
காலம் மாற மாற திருடும் முறையும் விதவிதமாக மாறி வருகிறது.
வழிப்பறி, பிக்பாக்கெட், வீடு புகுந்து கொள்ளை, செயின் பறிப்பு என இருந்த கொள்ளை கும்பல்
தற்போது ஹைடெக் கொள்ளையர்களாக மாறியுள்ளனர்.
நாங்கள் ரிசர்வ் வங்கியில் இருந்து பேசுகிறோம் உங்கள் ஏடிஎம் கார்டின் பின் நம்பர் மாறி உள்ளது. ஏடிஎம் கார்டில் உள்ள 14 இலக்க நம்பரை கூறவும் என கூறுவார்கள். நாம் கூறிய அடுத்த நொடியில் நமது அக்கௌன்ட் டில் வைத்திருந்த பணம் காணாமல் போய்விடும்.
அதே போன்று கிரெடிட் கார்டில் பொருட்கள் வாங்கியவுடன் உங்கள் கிரெடிட் கார்டுக்கு புதிய ஆப்பர் வந்துள்ளது. உங்கள் செல்போனுக்கு OTP அனுப்பி உள்ளோம் அதை மட்டும் சொன்னால் போதும் உங்கள் கிரெடிட் லிமிட் ஏறிவிடும் என கூறுவார்கள்.
அந்த OTP யை கூறிய அடுத்த நிமிடம் நமது கிரெடிட் கார்டில் ஒரு ரூபாய் இருக்காது. அந்த நொடியே நமக்கு வந்த அழைப்பை தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் ஆகி இருக்கும். அந்த எண்ணை காவல்துறையினர் டிராக் செய்ய முடியாது என கூறுகிறார்கள்.
தற்போது அடுத்த கட்ட முறையை கையாள தொடங்கி உள்ளனர்.
தற்போது மக்கள் அனைவரும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர். இந்த நிறுவனமும் ஓரளவுக்கு நம்பிக்கையாக பொருட்களை அனுப்பி வருகின்றது.
தற்போது பிளிப்கார்ட்டில் பொருட்கள் வாங்கிய நபரின் வீட்டிற்கு ஸ்பீட் போஸ்ட் ஸ்கிராட்ச் கார்டு ஒன்று பிளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து அனுப்பியதாக வந்துள்ளது.
அதில் நீங்கள் எங்கள் நிறுவனத்தில் பொருள்கள் வாங்கியதற்காக சிறந்த வாடிக்கையாளராக தேர்ந்தெடுத்து ரூபாய் 12 லட்சத்து 50 ஆயிரம் தருகிறோம்.
உங்களது பெயர், வீட்டு முகவரி, வங்கி பெயர், வங்கி கிளை ,வங்கி கணக்கு எண், IPSC Code, pan Card No(இருந்தால்) இந்த தகவலை எல்லாம் அவர்கள் அனுப்பி உள்ள வாட்ஸப் நம்பருக்கு அனுப்பினால்
15 நிமிடங்களில் நமது அக்கவுண்டுக்கு ரூபாய் பணம் 12 இலட்சத்து 50 ஆயிரம் வந்துவிடும் என அதில் உள்ள என்னை தொடர்பு கொண்டு பேசியபோது கூறியுள்ளனர்.
அவர்கள் பேச்சில் சந்தேகம் அடைந்த நபர் தான் பிலிப்கார்டில் பொருள்கள் ஆர்டர் செய்து வாங்கியபோது டெலிவரி செய்த நபரின் எண்ணில் தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டபோது அவர் இதுபோன்று எந்த நிறுவனமும் பணம் அளிக்காது உடனே இதுபற்றி காவல்துறையில் புகார் செய்யுங்கள் என கூறியுள்ளார்.
நமது வங்கி கணக்கிலிருந்து பணம் போய் இருந்தால் கூட காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
நல்ல வேளை நான் இந்த தகவலை நம்பி அனுப்பவில்லை அனுப்பியிருந்தால் ஊரடங்கு நேரத்தில் சோற்றுக்கு நான் என்ன செய்வேன்?
இப்படியும் லெட்டர் அனுப்பி புது வழியில் திருட ஆரம்பித்து விட்டார்களே என புலம்பியவாறு சென்றார் அந்த நபர்.
பொதுமக்களே உஷார், உங்கள் செல்போனுக்கு அந்த நம்பரை மட்டும் சொல்லுங்கள் எனக் கூறினால் கூட எதையும் யாருக்கும் தெரியாத நபர்களுக்கு கூற வேண்டாம்.