Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்த வரைவு அறிக்கை தயார். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

0

 

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “சென்னை தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்படும்.

ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர் – மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை விரைவில் வெளியிட இருக்கிறது.

பாலியல் புகார் கூறப்பட்ட ஆசிரியரை கல்வி நிறுவனம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்-தனி குழு அமைத்து விசாரணை நடத்த உள்ளோம்.

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. பாலியல் புகார் குறித்து கல்வி நிறுவனம் சார்பில் குழு அமைத்து விசாரணை நடைபெறும்.

ஆன்லைன் வகுப்புகளால் இனி பிரச்சனை வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நல்ல ஆசிரியர்களுக்கும் களங்கம் வரக்கூடாது என்பதற்காக பாலியல் புகார் விவகாரத்தில் குழு அமைக்கப்படும்.

பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா குழு ஏற்கனவே உள்ளது. பெண் ஆசிரியர் ஒருவர் இதற்கு தலைமை வகிப்பார். விசாகா கமிட்டி அனைத்துப் பள்ளிகளிலும் உள்ளதா, செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்த வரைவு அறிக்கை தயாராக உள்ளது. முதல்-அமைச்சர் ஒப்புதலுக்குப் பின்னர் முறையாக மத்திய அரசுக்கு அனுப்பப்படும்” என்று அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.