கூடுதல் பணி நேரம்
புலம்பும் திருச்சி போலீசார் .
கொரோனா பொதுமுடக்கத்தின்போது, சோதனை மையங்களை அமைத்து, வழக்கமான பணிகளையும் மேற்கொள்வதால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது என போலீசார் புலம்பி வருகின்றனர்.
கொரோனா பொதுமுடக்கத்தை ஒட்டி போலீசார் ஆங்காங்கே தாற்காலிக சோதனை மையம் (செக்கிங் பாயிண்ட்) அமைத்து கண்காணிப்பு பணிகளையும் பாதுகாப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு காவல் நிலைய கட்டுப்பாட்டிலும் சுமார் 15 முதல் 20 இடங்களில் இந்த பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில், ஏ, பி என்ற வகையில் பணிகள் ஒதுக்கப்படுவதால் ஒவ்வொருவரும் 12 மணி நேரத்துக்கும் அதிமாக தொடர்ந்து பணியாற்றும் சூழல் உள்ளது.
ஓய்வு கிடைப்பதில்லை. ஏ , பி, சி என்ற கணக்கில் பணியாற்றும் போது
நாள் 1 க்கு 3 முறைகளில் சுழற்சிப் பணியாற்றலாம். ஆனால் தற்போது ஏ பி முறையில் பணி நேரம் அதிமாக உள்ளதால் பணிச்சுமையுடன் மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளது.
எனவே பழையபடியே ஏ பி சி என்ற முறையில் பணி ஒதுக்கப்பட வேண்டும் என போலீஸôர் புலம்புகின்றனர்.
ஆனால் காவல் துறை அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டபோது, அதிகமான இடங்களில் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்துப் போலீசார் தனியாக சோதனை மையங்களை அமைத்துள்ளதால்,
காவலர்கள் பற்றாக்குறை உள்ளது எனவே இதுபோன்று பணி ஒதுக்கப்பட்டுள்ளது. போலீசார்ர் கூடுதல் பணியாற்றிலும் அதற்கேற்ற வகையில் ஓய்வும் வழங்கப்படுகிறது.
இந்த சுழற்சிமுறை பணி காவலர்களுக்கு மட்டுமல்ல அனைத்து பிரிவு அதிகாரிகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளனர்.
பொதுமுடக்கம் விதிமீறல்
ஒரே நாளில் 800 வழக்குகள்:
திருச்சியில் பொதுமுடக்க காலத்தில் விதிமீறிய வகையில், மாநகர காவல்துறையினர் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மாலை வரையில் சுமார் 800 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
பொதுமுடக்க காலத்தில் விதிகளை மீறிய வகையில் பலரும் ஊர் சுற்றி வருகின்றனர் என்ற புகார்கள் எழுந்ததை அடுத்து தமிழக அரசு விதிமுறைகளை கடுமையாக்கி, காலை 10 மணி வரையில் மட்டுமே அத்தியாவசி பொருட்களா விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எனவே இன்று முதல் இந்த கடுமையான நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
முன்னதாக, காவல்துறையினரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அத்தியாவசிய தேவை என்ற பெயரில் பொய்யான தகவல்களை தெரிவித்து,
ஏராளமானோர் வாகனங்களில் சுற்றுவதை தவிர்க்க அறிவுறுத்தியதுடன், வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு பின்னர் வாகனங்களில் தேவையின்றி திரிவோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அந்த வகையில், ஆட்டோக்கள் (2) மற்றும் கார்களில் (ஓட்டுநருடன் சேர்த்து 4) குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பயணிப்பவர்கள், மற்றும் இரு சக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றித்திரிவோரை கண்டறிந்து வழக்குகள் பதிவு செய்தனர்.
மேலும் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமை உள்ளிட்ட விதிமுறை மீறல்களுக்கும் பதிவு செய்த வகையில் வெள்ளிக்கிழமை மாலை வரையில், சுமார் 800 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
சனிக்கிழமைக்குப் பின்னர் மேலும் கடுமையாக்கப்படுட அதிகளவில் வழக்குகள் பதிவு செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.