ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுடன் இணைந்த கத்ரிதயாராம் சிவ்ஜி கட்டளைக்கு சொந்தமான T.SNo 2174 Ward B 49-ல் அமைந்துள்ள இடத்தினை அத்து மீறி நுழைந்து திருக்கோயில் கான்கீரிட் பெயர் பலகை மற்றும் கான்கீரிட் சுவற்றினை இடித்து தள்ளி -அகற்றி அத்து மீறி நுழைந்தவர்கள் மீது கோயில் இணை ஆணையர் மாரிமுத்து ஸ்ரீரங்கம் காவல் நிலையதில் புகார்
இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்கள் யார் என ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு ஆக்கிரமிப்புபாளர்கள் பயன்படுத்திய பொக்லின் இயந்திரத்தை ஸ்ரீரங்கம் போலீசார் பறிமுதல் செய்து,
ஆக்கிரமிக்க முயன்ற வழக்கறிஞர் ஆதி நாராயண மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




