Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆதரவற்ற மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்

0

ஆதரவற்ற அனாதை மூதாட்டி மரணம்.

நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்

கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் தஞ்சாவூர் பேருந்துகள் நிற்கும் இடத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அந்த மூதாட்டியை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும் சிகிச்சையில் இருந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி கடந்த 16-4-2021 ஆம் தேதி இறந்துவிட்டதாகவும் இறந்துபோன மூதாட்டியின் பெயர் விலாசம் தெரியாததால் மருத்துவமனை ஊழியர்கள் இறந்துபோன மூதாட்டியின் பிரேதத்தை சவக்கிடங்கில் வைத்திருப்பதாகவும் தகவல் கிடைக்கப் பெற்றது.

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து போன 70 வயது மதிக்கதக்க மூதாட்டி இறப்பின் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி கோ அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு தகவல் அளித்துள்ளார்.

ஆதரவற்ற மூதாட்டி இறந்த தகவலை கண்டோன்மென்ட் காவல் நிலைய பெண் தலைமை காவலர் பாலசரஸ்வதி தலைமை காவலர் ஆறுமுகம் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் அடிப்படையில் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், நாகராஜன் உள்ளிட்டோர் தென்னூர் உழவர் சந்தை குமிலிக்கரை மயானத்தில் மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.