திருச்சி பாலக்கரையில்
கஞ்சா விற்ற 2 பேர் கைது .
பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது இயேசு, சுப்பிரமணி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேர் மீதும் பாலக்கரை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.