*பெட்ரோல் , டீசல் , சமையல் எரிவாயு சிலிண்டர் , விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தினர் மனு !*
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மாநில பொது செயலாளர் எஸ்.ஷாஜகான் தலைமையில் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கபட்டது இவ்மனுவில் கூறியிருப்பதாவது.
1) அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் அரசின் அனைத்து சலுகைகளையும் பெற்றுக்கொண்டு அதே பணியில் மீண்டும் பணிபுரிவதால் , படித்த பட்டதாரி இளைஞர்கள் அரசு பணியில் பணிபுரிவது சவாலாக உள்ளது. பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை கிடைக்காமல் ஆயிரக்கான இளைஞர்களின் வாழ்க்கை கேள்வி குறியாக உள்ளது . ஆகையால் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றும் அரசு அலுவலகத்தில் பணியாற்றி வரும் அரசு பணியாளர்களை அப்பணியிலிருந்து நிரந்தரமாக அகற்றி அந்த பணிகளில் அரசு வேலை வாய்பு அலுவலகத்தில் பதிவு செய்த படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு அரசு பணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
2) புதிதாக கட்டப்பட்ட பாலங்களில் குண்டும் குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ஆகையால் குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளை சீரமைப்பு செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,
3) மத்திய அரசு விலை ஏற்றிய பெட்ரோல் ,டீசல், கேஸ் சிலிண்டர், விலை உயர்வினால் ஏழை,மற்றும் நடுத்தர மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் பாதிப்புகுள்ளாகி உள்ளனர்.
ஆகையால் பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு சிலிண்டர் , விலையேற்றத்தை மத்திய அரசு குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்மனுவில் கூறியுள்ளார் .
இந்த நிகழ்வில் நஜீர் அஹமது, ராமர்,பக்கீர் மைதீன்,பிரபாகரன் மேலும் நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.