“பணியின் பொழுது கொரோனா பாதித்த போலிசாருக்கு டிஜிபி அறிவித்த நிதி என்னாச்சு….?
இராணுவம் எல்லையில் நாட்டு மக்களை காக்கிறது என்றால்_தாய் நாட்டு மக்களுக்கு எதிரான காயவர்களிடமிருந்து நம்மை காப்பது காவல்துறை என்றால் மிகையாகாது. ஆனால் இந்த அற்புத செயல் செய்யும் கண்ணியமிக்க காவலர்களின் பல அற்புத செயல் மறைக்கபடுவதும்_சில அற்ப செயல்கள் பூதாகரமாக்கப்படுவது தான் தாய் தமிழகத்தின் வாடிக்கை.
அந்த வகையில் உலகையே அச்சுறுத்திய கொரோனாவிலிருந்து நம்மை காத்த முன் கள பணியாளர்களின் ஒருவர்களான தமிழ்நாடு காவல் துறையில் பலர் தனது பணி காலத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டார்கள். சிலர் தங்களது இன்னுயிரையும் இழந்தனர். இவ்வாறு பணியின் பொழுது கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு காவலர்களின் மருத்துவ செலவை ஈடுசெய்யும் வகையில் தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி கண்ணியமிக்க திரு.திரிபாதி அவர்கள் கடந்த 2020-மே மாதம் ரூபாய் 2-இலட்சம் நிவாரண தொகையாக அறிவித்தார். ஆனால் இந்த நிவாரண தொகை ஆறு மாத காலமாகியும் இதுநாள் வரை கொரோனாவினால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்கு சென்று சேரவில்லை என்பது உண்மையிலையே வருத்தமளிக்கிறது.
நீதியும், நிதியும் உரிய காலத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு சென்று சேர வேண்டும் சார். தாமதம் என்பது தவிர்க்கப்பட வேண்டும்.
எனவே தமிழக டிஜிபி அவர்கள் கொரோனா காலத்தில் தனது இன்னுயிரை பொருட்படுத்தாது சேவை செய்து கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு காவலர்களுக்கு அறிவித்த நிதியை உடனடியாக வழங்க மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்
என திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்ய வழக்கறிஞர் கிஷோர் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.