Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்து தமிழ் திசை பத்திரிகையின் திருச்சி பதிப்பு பொறுப்பாசிரியர் தன்ராஜ் காலமானார்

0

காலமானார்

https://trichyxpress.com/

திருச்சி
இந்து தமிழ் திசை நாளிதழின் திருச்சி பதிப்பு பொறுப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.தனராஜ்(வயது 52), மாரடைப்பால் இன்று காலமானார்.

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த அப்பணநல்லூரைச் சேர்ந்த சுப்பிரமணி- லட்சுமி தம்பதியரின் மூத்த மகன் எஸ்.தனராஜ். தினமணி நாளிதழின் முசிறி பகுதி நேர செய்தியாளராக பணியைத் தொடங்கிய இவர், தினபூமி நாளிதழின் திருச்சி பதிப்பின் செய்தி ஆசிரியராக 5 ஆண்டுகளாக பணியாற்றினார். பின்னர், தினமணி, தினகரன் நாளிதழ்களில் திருச்சி பதிப்பின் செய்திப் பிரிவிலும் பணியாற்றினார்.

தொடர்ந்து, கடந்த 2013-ம் ஆண்டு இந்து தமிழ் திசை நாளிதழ் தொடங்கியது முதல் திருச்சி பதிப்பின் பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு மலர்க்கொடி என்ற மனைவியும், ஹரிகிருஷ்ணா என்ற பிளஸ் 1 படிக்கும் மகனும் உள்ளனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த அப்பணநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நாளை (டிச.4) இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.

தொடர்புக்கு:
7401329429,
8248125042.

Leave A Reply

Your email address will not be published.