Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன் – 07.12.2020

இன்றைய ராசிப்பலன் - 07.12.2020

https://trichyxpress.com/
0

இன்றைய ராசிப்பலன் – 07.12.2020

https://trichyxpress.com/

மேஷம்

உங்களின் ராசிக்கு மனதில் குழப்பம் இருக்கும்.

வீட்டில் தேவையில்லாத பிரச்சினை இருக்கும். பொறுப்புடன் இருந்தால் வீண் செலவுகளைத் தவிர்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர் வகையில் மகிழ்ச்சி உண்டானாலும் வீண் செலவுகள் இருக்கும். உத்தியோகத்தில் மந்தநிலை இருக்கும். சுபகாரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். உடல் உஷ்ணம் குறையும். உடன் பிறந்தவர்களிடம் அனுகூலம் கிடைக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி உண்டாகும். பெண்கள் வீட்டில் தேவையான பொருட்களை வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகள் படிப்பில் சிறப்பு இருக்கும். தொழிலில் உடன் பணிபுரிபவர்கள் சிறப்பு பெறுவார்கள். சுப காரியங்கள் உண்டாகும்.

கடகம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக இருக்கும்.பூர்வீக சொத்துகளால் அலைச்சல் இருந்தாலும் லாபம் கிடைக்கும். வீண் செலவுகள் உண்டாகும். தொழிலில் நல்ல மாற்றம் இருக்கும். நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் முன்னேற்றம் பெருகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு வீட்டில் தாராள தன வரவு உண்டாகும் லட்சுமி கடாட்சம் பெருகும். தொழிலில் எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். சுபகாரியங்களில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமை அகலும். உடல்நிலை சீராக இருக்கும்.

கன்னி

https://trichyxpress.com/

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை குறைந்து இருக்கும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். தொழிலில் போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.புதிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வராத கடன் வசூல் ஆகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு பணவரவு நன்றாக இருக்கும். வீட்டிலுள்ள நெருக்கடி நீங்கி தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் கடன் பிரச்சினை அகலும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் வழியில் ஆதரவு கிடைக்கும். திடீர் பயணம் இருக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் மனமகிழ்ச்சி இருக்கும். தொழிலில் சிலருக்கு கௌரவப் பதவி உண்டாகும். பகைவர் கூட நண்பராக மாறுவார்கள்.உத்தியோகத்தில் வெளியூர் நபர்களால் அனுகூலம் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவு உண்டாகும். உடன்பிறந்தவர் களுக்கு ஒற்றுமை கூடும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் பாதிப்பு கூடும்.நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவு சீராக இருக்கும். எதிலும் நிதானத்துடன் செயல்படவேண்டும்.

மகரம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலையில் தடங்கல் இருக்கும். தொழிலில் கொடுக்கல் வாங்கலில் நிதானம் வேண்டும். பிறரை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். பணியில் கவனம் வேண்டும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு மனதிற்கு புது தெம்பு உண்டாகும்.பெரியவர்களின் ஆதரவால் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். உத்யோகத்தில் புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் உண்டாகும். சுப காரியங்கள் உண்டாகும். வருமானம் பெருகும் வாய்ப்பு இருக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சீராக இருக்கும். தெய்வீக காரியங்கள் உண்டாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு லாபம் இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டாகும். குழந்தைகளால் பெருமை உண்டாகும். கொடுத்த கடன் அனைத்தும் வசூலாகும்

https://trichyxpress.com/

Leave A Reply

Your email address will not be published.