திருச்சியில் லால்குடி ஒன்றியம் பெருவளநல்லூர் ஊராட்சியில் திமுக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்தார்.கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு….
மிஷன்-200 என்பது, 234 தொகுதிகளில் திமுக அதன் கூட்டணி கட்சிகளை சேர்த்து கொண்டு 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது. திமுக மட்டும் தனித்து அல்ல. தமிழக அரசு, 2,500 ரூபாய் மக்களுக்கு கொடுப்பதை வரவேற்கிறோம். 5,000 ரூபாய் கொடுத்தாலும் திமுக தான் வெற்றிப் பெறும்.
எனது சொந்த ஊரான லால்குடி தொகுதியில் போட்டியிடுவது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் முடிவெடுப்பார்- நேரு
மு.க. அழகிரி தனிக்கட்சி துவங்குவது குறித்த கேள்விக்கு, திமுக முதன்மைச் செயலாளர் நேரு பதில் சொல்ல மறுத்து விட்டார்.
மேலும் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர்
கருணாநிதி ஆட்சியை தர, திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கிறார்.. திமுகவினர் இருக்கின்றனர் என்பதாலேயே, நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் ‘கருணாநிதி ஆட்சி தருகிறோம்’ என்று சொல்வதில்லை என்றார் நேரு.