வாக்காளர் சிறப்பு முகாம். அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு இடங்களில் ஆய்வு.
வாக்காளர் சிறப்பு முகாம். அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு இடங்களில் ஆய்வு.
திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு பர்மா காலணியில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வதற்காக நடைபெற்ற சிறப்பு முகாம்களை திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்எல்ஏ பார்வையிட்டார்.
உடன் ஒன்றிய செயலாளர் குண்டூர் மாரியப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தார்கள்.
இதேபோல் மலைக்கோட்டை, பாலக்கரை,கேகே நகர், காட்டூர் ஆகிய பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களிலும் மகேஷ் பொய்யாமொழி MLA பார்வையிட்டார்.