Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அருமையான ருசியில் சைவ மீன் குழம்பு செய்வது எப்படி என்று தெரியுங்களா.

அருமையான ருசியில் சைவ மீன் குழம்பு செய்வது எப்படி என்று தெரியுங்களா.

0

அருமையான ருசியில் சைவ மீன் குழம்பு செய்வது எப்படி என்று தெரியுங்களா.

இலை, பூ, காய், கனி, தண்டு, பட்டை என மரத்தின் ஒவ்வொரு பாகமும் பயன்படக்கூடிய மரங்களில் வாழைக்கு முதலிடம். வாயுத் தொந்தரவு தரும் என்பதற்காகச் சிலர் வாழைக்காயைச் சமையலில் சேர்த்துக்கொள்வதில்லை.

இன்னும் சிலரோ வறுவல், பஜ்ஜி போன்றவற்றுக்கு மட்டும்தான் வாழைக்காய் சரிப்பட்டுவரும் என்று நினைக்கக்கூடும். ஆனால், புட்டு தொடங்கி குழம்பு வரை வாழைக்காயில் பலவிதமாகச் சமைக்கலாம்.
அதில் ஒன்றுதான் சைவ மீன் குழம்பு. என்ன குழப்பமாக உள்ளதா. இது வாழைக்காயை வைத்து செய்யப்படுவது. செய்முறையை பாருங்கள்.

தேவையானவை:

வாழைக்காய் – 1
மிளகாய்த் தூள் – ஒன்றரை டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 8
பச்சை மிளகாய், தக்காளி – தலா 2
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பு வடகம் – அரை டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, புளி, நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: வாழைக்காயை வட்டமாகச் சிறிது தடிமனாக நறுக்கி புளித்த மோர் கலந்த தண்ணீரில் போடுங்கள்.வெங்காயம், தக்காளி, மிளகாயை நறுக்கிக்கொள்ளுங்கள். தேங்காயையும் சோம்பையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.

மண் சட்டியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிப்பு வடகத்தைப் போட்டுத் தாளியுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, வாழைக்காய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு உப்பு போட்டு மூன்று வகை பொடிகளையும் சேர்த்துத் தேவையான தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க விடுங்கள்.

பிறகு தேங்காய் விழுதைச் சேருங்கள். சிறிது நேரம் கொதித்ததும் கறிவேப்பிலையைத் தூவி இறக்குங்கள். விருப்பப்பட்டால் மாங்காயைச் சேர்க்கலாம். இறக்கும்போது சிறிய துண்டு வெல்லத்தைச் சேர்க்கலாம். இது அருமையான சுவையில் மீன் குழம்பு போலவே இருக்கும். சைவம் சாப்பிடுபவர்களுக்கு இந்த சைவ மீன் குழம்பு மிகவும் பிடிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.