கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த
சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்
திருச்சிராப்பள்ளி தென்னூர் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கோ அபிஷேக புரம் கோட்டம் 51 வது வார்டில் covid-19 நோய்த் தொற்றைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் விஸ்வப்ப நாயக்கன் பேட்டை தெருவில் நடைபெற்றது.
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பொன்சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர்
பொதுமக்களுக்கு பரிசோதனையில்
சளி மாதிரி எடுத்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது, அவற்றை பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு முகக்கவசம் அணியுமாறும் அரசு அறிவுறுத்தும் அறிவுரைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது. முகாமில் 51வது வார்டு சுகாதார மேற்பார்வையாளர் நந்தகோபால், ஆய்வக நுட்பனர் ராஜ்குமார், நகர்ப்புற சுகாதார செவிலியர் அமுதவள்ளி, ஸ்வர்ணா பென்ஸி உள்ளிட்ட
சுகாதாரத்துறையினர், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.