விழுப்புரத்தில் பாஜக சார்பில் வேல்யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது கூறியதாவது
‘தமிழகத்தில் இருக்கின்ற இந்து விரோத தீய சக்திகள் திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் கூட்டணியை வேரோடும், வேரடி மண்ணோடு களைந்தெடுப்பதற்காக மக்கள் மத்தியிலே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான யாத்திரைதான் இந்த வெற்றிவேல் யாத்திரை.
இந்து பெண்களை எல்லாம் விபச்சாரிகள் என்று பேசினார் திருமாவளவன். தமிழக அரசு இன்று வரைக்கும் திருமாவளவனை கைது செய்த பாடில்லை. ஆகவேதான் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான யாத்திரைத்தான் இது என்றார்.
மேலும், மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களிடம் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக சொல்லி இருக்கிறார். ஆலோசனை செய்து அவர் நல்ல முடிவை எடுப்பார். தீயசக்தியான திமுகவை அழிக்கின்ற நல்ல முடிவினை கண்டிப்பாக அவர் எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன்’,
முக.அழகிரி திமுகவிற்கு எதிராக செயல்பட மாட்டார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ஆனால் பிஜேபி பீகார் போன்று தமிழகத்தில் முக.அழகிரியை வைத்து திமுக கண்டம் பண்ண பார்க்கிறதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதற்காக ரஜினி அழகிரி போன்றவர்களை தேர்தல் களத்தில் இறக்க திமுக திட்டமிட்டுள்ளது.இந்த நிலையில் ஹெச்.ராஜா அழகிரி திமுகவை அழிப்பார் என்று ஆரூடம் சொல்லியிருப்பது திமுக மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.