கே.என்.நேரு பிறந்த நாளை முன்னிட்டு உறையூர் பகுதி கழகம் சார்பில் அன்னதானம்
கே.என்.நேரு பிறந்த நாளை முன்னிட்டு உறையூர் பகுதி கழகம் சார்பில் அன்னதானம்

முன்னாள் அமைச்சர் நேரு பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம்..!
திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு பிறந்த நாளை திருச்சியில் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி உறையூர் எம்எல்ஏ அலுவலகம் அருகே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தினை தொழிதிபர் அருண் நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தில்லைநகர் பகுதி செயலாளர் கண்ணன், வட்ட செயலாளர் முத்துபழனி, தர்முசேகர், கமால், தனபால், மகளிர் அணியை சேர்ந்த மஹாலட்சுமி, நாகூர் அமின், விசாலாட்சி, பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல திருச்சி மணிகண்டத்தில் ஒன்றிய செயலாளர் மாத்துார் கருப்பையா தலைமையில் திமுகவினர் கொடியேற்றி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதேபோல் திருச்சி உறையூர் பகுதி செயலாளர் இளங்கோ ஏற்பாட்டில் MLA அலுவலகம் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது , தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் லெட்சுமணன், உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.