Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடல் எடையை குறைக்குமா ?

சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடல் எடையை குறைக்குமா ?

0

சக்கரை வள்ளிக் கிழங்கில் சுவை மட்டுமில்லாமல் உடலுக்கான நன்மைகள் அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி உடல் பருமனை குறைக்க மிகவும் உதவும் கிழங்கு. சுவையை விட்டு கொடுக்காமல் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க நார்ச்சத்து மிகவும் அவசிய, மேலும் அது சக்கரை நோயை கட்டுப்படுத்த உதவும். அதிக நார்ச்சத்து உள்ளதால் இதில் நாம் திருப்த்தியாக சாப்பிட்ட உணவை கொடுக்கும். மேலும் நம் பசியை கட்டுப்படுத்தி அதிகம் சாப்பிட விடாமல் தடுக்கும். குறைந்த கலோரி உள்ள சக்கரை வள்ளிக் கிழங்கை பசிக்கும் பொழுது எண்ணெய் பலகாரத்திற்கு பதில் உண்டால் பசியும் தீரும், உடல் பருமனும் ஆகாது. எண்ணெயில் வறுத்து உண்ணாமல், வேகவைத்து அல்லது சுட்டு சாப்பிட்டால் நல்லது. அதிக கிளைசெமிக் உடலில் இருந்தால் ரத்தத்தின் சக்கரை அளவை அதிகரிக்கும், அதனால் உடல் எடையும் அதிகரிக்கும். ஆனால் சக்கரை வள்ளிக் கிழங்கு இனிப்பு சுவையை கொடுப்பதோடு கிளைசெமிக் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.