திருச்சியில் நின்று இருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
திருச்சியில் நின்று இருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
திருச்சி கருமண்டபம் பகுதியில் இன்று மதியம் நின்றுகொண்டிருந்த கார் தீ பற்றி எரிந்தால் பரபரப்பு.
திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஆனந்த் என்பவர் தனக்கு சொந்தமான ஆம்னி காரில் காய்கறிகள் எடுத்து வியாபாரம் செய்து வந்த நிலையில் இன்று மதியம்
கருமண்டபம் பகுதியில் தனது காரை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றுள்ளார். அப்போது கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
விபத்துக்கு காரணம் காரில் உள்ள சிலிண்டர் கசிவு தான் என கூறப்படுகிறது.