நலவாரியங்களில் நேரடி பதிவை தொடங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம். நலவாரியங்களில் நேரடி பதிவை தொடங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம். திருச்சி By admin On Sep 8, 2020 0 Share முறைசாரா நலவாரியங்களில் நேரடி பதிவை தொடங்கவேண்டும். புதுப்பித்தல் பணம் பயணிகளுக்கான விண்ணப்பங்களுக்கு டிசம்பர் மாதம் வரை காலஅவகாசம் வழங்க வேண்டும். ஆன்லைன் பதிவு அறிவிப்புக்கு முன்பு உள்ள பதிவு விண்ணப்பங்களை நேரடியாக பெற்று அட்டை வழங்க வேண்டும். கொரோனா நிவாரண நிதியை தகுதி உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். மத்திய தொழிற்சங்கங்களுக்கு லாகின் ஐடி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் செங்குளம் காலனியில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ மாநகர் மாவட்ட துணைத்தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தரைகடை சங்க செல்வி, கட்டுமான சங்க சந்திரசேகர், சாலைப்போக்குவரத்து சங்க வீரமுத்து, சிஐடியு நிர்வாகிகள் ஜெயபால், சந்திரன், கருணாநிதி, புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் , பூமாலை, மாவட்ட பொருளாளர் சம்பத் உள்பட பலர் கலந்துகொண்டனர். 0 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail